சொந்த பிள்ளைகளுக்கே உணவு தராமல் கொடுமைப்படுத்தியவர் மேகன் மெர்க்கலின் தந்தை: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகனின் தந்தை, சொந்த பிள்ளைகளுக்கே உணவு தர மறுத்த மிகவும் மோசமானவர் என்ற தகவல் அவரது முன்னாள் மனைவியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தாமஸ் மெர்க்கலின் முன்னாள் மனைவி ரோஸ்லின் மெர்க்கலுக்கு தற்போது 73 வயதாகிறது.

மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியுடன் நெருக்கமானதில் இருந்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் ஒதுங்கியே இருந்த ரோஸ்லின்,

தற்போது ஹரி மேகன் தம்பதிக்கு குழந்தை பிறந்த பின்னர் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

தமது முன்னாள் கணவர் தாமஸ் மெர்க்கல் மிகவும் மோசமானவர் மட்டுமின்றி, தன்னிச்சையாக செயல்பட்டு சொந்த குடும்பத்தையே புறக்கணித்தவர் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டுமின்றி தம்மை பல முறை ஏமாற்றியவர் எனவும், சொந்த பிள்ளைகளுக்கு உணவு வழங்கவே மறுத்தவர் எனவும் ரோஸ்லின் தெரிவித்துள்ளார்.

இதனால் மேகன் மெர்க்கல் தமது தந்தை தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் எனவும்,

அவரை தமது குழந்தையிடம் அண்டவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் ரோஸ்லின் மெர்க்கல் எச்சரித்துள்ளார்.

ரோஸ்லினை கடந்த 1964 ஆம் ஆண்டு தாமஸ் மெர்க்கல் திருமணம் செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.

இதன் பின்னர் 1979 ஆம் ஆண்டு டோரியா ராக்லாண்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவரே தற்போது இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொண்டுள்ள மேகன் மெர்க்கல்.