5 நாட்களாகியும் மேகன் குழந்தையை சந்திக்க வராத வில்லியம் – கேட் தம்பதி!

மேகனுக்கு குழந்தை பிறந்து 5 நாட்களாகியும் அரண்மனையிலிருந்து மூத்த உறுப்பினர்கள் யாரும் சந்திக்க செல்லாமல் உள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவிக்கு கடந்த திங்கட்கிழமை காலை 5.26 மணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

அரியணை ஏறும் வரிசையில் ஏழாவது குழந்தையான ஆர்ச்சியை, கடந்த 9ம் திகதியன்று ராணி மற்றும் இளவரசர் பிலிப் வின்ட்சர் கோட்டையில் சந்தித்தனர்.

குழந்தை பிறந்து 5 நாட்களை கடந்த பின்னரும் கூட, வில்லியம் – கேட் ஆகியோருடன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதியினர் நேரில் சென்று மேகன் மற்றும் குட்டி இளவரசர் ஆர்ச்சி ஹாரிசனை சந்திக்கவில்லை.

ஜேர்மனியில் இருந்து திரும்பியதும் இளவரசர் சார்லஸ் – கமிலா தம்பதியினரும், அவர்களை தொடர்ந்து அடுத்த வாரத்தில் வில்லியம் – கேட் தம்பதியினர் குழந்தையை சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.