கர்ப்பமான 14 வயது சிறுமி தற்போது எப்படியுள்ளார்?

அமெரிக்காவில் காணாமல் போன 14 வயது கர்ப்பிணி சிறுமி பத்திரமாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த வர்காஸ் (14) என்ற சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

சிறுமி குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியிருந்தனர்.

இந்நிலையில் சிறுமி பத்திரமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் விடுத்துள்ள அறிக்கையில், காணாமல் போன சிறுமி வர்காஸ் கிடைத்துள்ளார், அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார் என என கூறப்பட்டுள்ளது.

வர்காஸ் எப்படி காணாமல் போனார் மற்றும் இன்னபிற விபரங்களை பொலிசார் உடனடியாக தெரிவிக்கவில்லை.