மனைவியை 59 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

பிரித்தானியாவில் தனது மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் Berkshire பகுதியை சேர்ந்த லாரன்ஸ் பிராண்ட் என்பவர் 2006 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக் இளம் வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் லாரன்ஸ்.

தனது மனைவியை கொலை செய்துவிட்டு , வீட்டில் சிந்திக்கிடந்த ரத்தத்தினை சுத்தம் செய்துவிட்டு அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து உதவி கேட்காமல், நேரடியாக பொலிசிற்கு தகவல் தெரிவித்து தனது மனைவி காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.

இதன் மூலம் அங்கு பொலிசார் வந்து, லாரன்ஸிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததில் அவர் மீது சந்தேகம் கொண்டு கைது செய்யப்பட்டார்.

இவர் தனது மனைவியை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், சம்பவம் நடைபெற்ற அன்று, இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தின்போது லாரன்ஸ் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் சரமாரியாக குத்தியபோது கத்தி உடைந்துள்ளது.

உடனே அவர் சமையலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். ஏஞ்சலாவின் உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது.

இது ஒரு மிகவும் கொடூரமான கொலை என கூறிய நீதிபதி, குறைந்தபட்சம் 16 வருடங்கள் 8 மாதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என தீர்ப்பளித்துள்ளார்.

ஏஞ்சலாவின் பெற்றோர் விடுத்துள்ள அறிக்கையில், திறமையான எங்களது மகள் நேர்மையான வழியில் வாழ்ந்து வந்தாள். நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு, தனது அழகிய குடும்பத்தை செம்மைப்படுத்தி எளிய முறையில் இன்பமாக வாழ்ந்து வந்தார்.

அவள் இறந்துவிட்டாலும் அவளது நினைவுகள் எப்போதும் எங்களுடன் இருக்கும் என கூறியுள்ளனர்.