பல்வலி வந்தாலே தாங்க முடியாத வலியை உருவாக்கி விடுகின்றது.
பல் வலி நம் மோசமான வாய் சுகாதாரத்தை மட்டும் சுட்டிக் காட்டுவதோடு, நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் கெடுதலாக அமைகின்றது.
சிலர் நிறைய நேரம் பல் துலக்குவதாலும், மிகவும் கடினமான பிரஷ்ஷை உபயோகிப்பதாலும் பற்கள் தேய்ந்து எனாமல் என்னும் வெளிப்புறப் பகுதியை எடுத்து விடுவார்கள். இது உள்ளே இருக்கும் குழாய் போல் பகுதியை திறந்து விடும். இதனால் அப்பற்கள் மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தி, பின்னர் தாங்க முடியாத வலி உண்டாக்கும்.
அந்த வகையில் இதிலிருந்து விடுபட நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எப்படி பல் வலியை தீர்க்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
- ஒரு பெரிய வெங்காயத்தையோ அல்லது சின்ன வெங்காயத்தையோ வட்ட வடிவில் வெட்டி அதை பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வேகமாகக் குறையும்.
- பல் வலி ஆரம்ப காலக் கட்டத்தில் தான் இருந்தால் சின்ன வெங்காயத்தை வாயில் நன்கு மென்று அதன் சாறை விழுங்கினாலே சரியாகிப் போய்விடும்.
- ஒரு சிறிய காட்டன் பாலில் இமுதல் 4 சொட்டுக்கள் வரை கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலி இருக்கின்ற இடத்தில் வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்து விட்டால் போதும். உடனடியாக சிறந்த நிவாரணதைப் பெற முடியும்.
- வெள்ளரிக்காயை ஸ்லைஸ்கள் செய்து அதை பற்களின் அடியின் வைத்திருந்தாலும் பல் வலி உடனடியாகக் குறைந்து விடும்.
- பல் வலி அதிகமாக இருந்தால் இஞ்சியை சிறு சிறு துண்டாக வெட்டி அதை பல் வலி இருக்கும் இடத்தினில் மென்று வந்தால் வலி குறைய ஆரம்பிக்கும்.
- வெதுவெதுப்பான டீ பேக்கை எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்து கொடுத்தால் போதும் பல் வலி, வீக்கத்தை வேகமாக சரிசெய்து விட முடியும்.