பிரித்தானிய இளவரசர் ஹரி தனது முன்னாள் இராணுவ தளபதியின் பெயரை தான், தன்னுடைய மகன் ஆர்ச்சிக்கு வைத்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி தன்னுடைய ஆலோகரும், இராணுவ தளபதியுமான டாம் ஆர்ச்சர்-பர்ட்டன் என்பவரின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே அவருடைய பெயரை மகனுக்கு சூட்டியிருக்கிறார்.
இதுகுறித்து இராணுவ உள்வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் கூறுகையில், இராணுவ வாழ்க்கையை காப்பாற்றியதோடு, நாட்டிற்கு சேவை செய்ய உதவியதற்கு நன்றியாகவும் தான், ஹரி தன்னுடைய மகனுக்கு ஆர்ச்சி என சுருக்கமாக பெயர் வைத்துள்ளார்.
சேவை செய்யும் போதும் சரி.. மற்ற தனிப்பட்ட முறையிலும் சரி.., ஆர்ச்சர் – ஹரி இருவரும் நெருக்கமான பிணைப்புடனே இருந்தனர். முன் வரிசையில் பணியாற்ற வேண்டும் என்கிற ஹரியின் கனவினை நிறைவேற்றுவதற்காக, ஆர்ச்சர் அவரை ஆப்கானிஸ்தானிற்கு அழைத்து சென்றிருந்தார்.
மேகன் உட்பட ஹரி குடும்பத்தாரை அதிகமுறை, ஆர்ச்சர் சந்தித்துள்ளார். தன்னுடைய மகனுக்கு ஆர்ச்சரின் பெயரை வைத்திருப்பது ஒரு நம்பமுடியாத மரியாதை என தெரிவித்துள்ளனர்.