பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் இளம்பெண்: முக்கோணக் காதல் கதை!

தனது முன்னாள் காதலனை மீண்டும் அடைவதற்காக, ஒன்றும் அறியாத தனது புது காதலனை ஆசை காட்டி ஏமாற்றி கொலை செய்த ஒரு இளம்பெண் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படுகிறார்.

லண்டனில் வாழ்ந்த ட்ரினிடாட் தீவைச் சேர்ந்த சமந்தா ஜோசப், ஷக்கிலஸ் என்ற நபரை சந்தித்திருக்கிறார்.

அழகிய சமந்தாவைக் கண்டதும் ஷக்கிலசுக்கு அவர் மீது காதல் ஏற்பட, இருவரும் சேர்ந்து சுற்றியிருக்கிறார்கள்.

சமந்தாதான் தனது மனைவி என்று முடிவு செய்த ஷக்கிலஸ், அவர் மீது பரிசு மழை பொழிந்ததோடு, தன் தாயிடம் சமந்தாவை திருமணம் செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் சமந்தாவுக்கு இன்னொரு காதலன் இருந்தது ஷக்கிலசுக்கு தெரியாது. சமந்தா, கேங் லீடரான மெக் லீன் என்னும் ஒருவருடனும் பழகி வந்திருக்கிறார்.

மெக்லீனுக்கு, சமந்தா ஷக்கிலசுடன் தனக்கு துரோகம் செய்தது தெரிய வந்ததும் அவர் சமந்தாவை கைகழுவி விட்டிருக்கிறார்.

ஆனால் மெக் லீனை பிரிய விரும்பாத சமந்தா, அவருக்காக ஷக்கிலசை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

ஒருநாள் கவர்ச்சியாக உடல் பாகங்கள் தெரியுமளவு மெல்லிய உடை ஒன்றை அணிந்து ஷக்கிலசை ஆசை காட்டி ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் சமந்தா.

ஏதேதோ ஆசைகளுடன் சென்ற ஷக்கீலசை மறைந்திருந்த மெக்லீனின் கேங்கை சேர்ந்த ஆறு பேர், தடியால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொன்றிருக்கிறார்கள்.

பின்னர் ஷக்கீலசுடனான தனது உறவு மற்றவர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, தனது சமூக ஊடக கணக்குகளை முடக்கியிருக்கிறார் சமந்தா.

ஆனால் ஷக்கீலசின் நண்பர்கள் அதை லாகின் செய்து சமந்தா மீது வசை மழை பொழிந்திருக்கிறார்கள்.

அத்துடன் கொலைக்கு பின் சமந்தாவும் மெக்லீனும் இரத்தம் தோய்ந்த உடைகளுடன் சிக்கிய CCTV கெமரா காட்சிகள் உட்பட ஆதாரங்களுடன் சிக்கியதையடுத்து இருவர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மெக்லீனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவருடன் சிறையில் அடைக்கப்பட்ட சமந்தா, ட்ரினிடாட் தீவைச் சேர்ந்தவர் என்பதால், பத்தாண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு அவர் தனது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுகிறார்.