ஆர்ச்சி குழந்தை பிறந்ததை அடுத்து, புதிய பெற்றோர்களாக உருவெடுத்திருக்கும் ஹரி – மேகன் தம்பதிக்கு, பிரித்தானிய ராணி வீடு ஒன்றினை பரிசாக அளித்துள்ளார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவி மேகன், கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேறி வின்ட்சர் நகரத்தில் உள்ள ஃபிரோமோர் இல்லத்தில் குடியேறினர்.
இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் தான் ஆர்ச்சர் என்கிற அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனை அரச குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வரும் வேளையில், புதிய பெற்றோருக்கு ராணி ஒரு பரிசளித்துள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் ஹரி – மேகன் தம்பதிக்கு புதிய வீடு ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அறைகள் எவ்வளவு பெரியது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அரச குடுபத்தை சேர்ந்தவர்கள் வெளியில் தாக்கியிருந்தாலும் கூட அவர்களுக்கு லண்டனில் ஒரு வீடு வழங்கப்படுவது வழக்கம் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக வெளியில் வசித்து வரும் ராணியின் மகன்கள் இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் ஆகியோருக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் வீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.