காலில் ரத்தத்துடன் சென்னை அணிக்காக போராடிய ஷேன் வாட்சன்!

நேற்றைய ஐபில் போட்டியின் போது காலில் ரத்தம் வழிந்தபடியே சென்னை அணியின் ஷேன் வாட்சன் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்.

சென்னை அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணி 1 வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது சென்னை அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன், 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்திருந்தனர்.

அவரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் பெரியளவிற்கு ரன்கள் ஏதும் அடிக்க தவறிவிட்டனர்.

ஆரம்பத்தில் இருந்தே ஷேன் வாட்சன் சரியாக விளையாடுவதில்லை என ரசிகர்கள் பலரும் குறை கூறிக்கொண்டே இருந்தனர். ஆனால் அணியின் கேப்டன் டோனி, தொடர்ந்து அவருக்கு வாய்பளித்துக் கொண்டே இருந்தார்.

பலரின் விமர்சனங்களுக்கு தன்னுடைய ஆட்டத்தின் மூலம் ஷேன் வாட்சன் நேற்று பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலில் ரத்தகாயத்துடன் இருக்கும் ஷேன் வாட்சன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், `நேற்றைய போட்டியின் போது வாட்சன் ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை விளையாடியுள்ளார். போட்டிக்குப் பின்னர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.