குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அனைவரின் கவனத்தை பெரும் விதமாக, பாலிவுட் நடிகைகளை போல தன்னுடைய திருமண ஆடைகளையும் வடிவமைத்துள்ளார்.
பெண்கள் எப்பொழுதும் தங்களுடைய திருமண நிகழ்வில், ஆடையிலிருந்து தாங்கள் அணியும் நகைகள் வரை ஒவ்வொன்றும் அனைவரின் கவனத்தையும் பெறவேண்டும் என ஆசைப்படுவார்கள்.
அந்த வரிசையில் குஜராத்தை சேர்ந்த அனுஷா பாட் என்கிற இளம்பெண், பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், சோனம் கபூரின் திருமண ஆடைகளைப் போன்று தன்னுடைய திருமண ஆடைகளை வடிவமைத்து, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
சோனம் கபூர் தன்னுடைய மெகந்தி நிகழ்விற்கு அணிந்திருந்ததை போன்ற ஆடையினை தன்னுடைய மெகந்தி நிகழ்விலும், திருமணத்தன்று தீபிகா படுகோன் அணிந்திருந்ததை போன்ற ஆடையினை தன்னுடைய திருமணத்தன்றும் அனுஷா அணிந்திருந்துள்ளார்.