இந்த இலையில் டீ போட்டு குடிங்க…

ரோஸ் குடும்பத்தை சார்ந்த இந்த தாவரத்தில் அடர்ந்த சிவப்பு நிற பெர்ரி பழங்கள் காணப்படுகின்றன.

இதன் இலைகள், பூக்கள், பழங்கள், தண்டுகள் ஏன் பட்டை கூட மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

இந்த மூலிகை இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, இரத்த குழாய் பாதிப்பை சரி செய்ய, இரத்த குழாயை விரிவடைய செய்ய, அனிஸ்சிட்டி, மன அழுத்தம் தூக்கமின்மை பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

அதிலும் இதில் தயாரிக்கப்படும் மூலிகை டீயில் பல்வேறு மருத்துவ குணங்களும் பல நோய்களும் தீர்வினையும் தருகின்றது.

தற்போது இந்த அற்புத டீயை எப்படி தயாரிப்பது என்பது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • உலர்ந்த ஹவ்தோர்ன் பெர்ரி
  • 500 மில்லி லிட்டர் தண்ணீர்
  • தேன் (சுவைக்கேற்ப)
பயன்படுத்தும் முறை

அடுப்பில் வைத்து இரண்டு நிமிடங்கள் தண்ணீரை சூடுபடுத்த வேண்டும். கொதிக்கின்ற நீரில் 4-5 பெர்ரி பழங்களை போடுங்கள்.

இதனை 8-10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்பொழுது சாற்றை இறுத்து டீயை குடிக்கலாம்.

அதனுடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கொள்ளுங்கள்.

நன்மைகள்
  • இதன் பழங்கள் மற்றும் சாறு நமக்கு இருக்கும் சீரண பிரச்சனைகளை சரி செய்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் மலச்சிக்கல், வயிறு மந்தம், வயிற்று வலியை சரி செய்கிறது. ஏன் வயிற்று அல்சர் கூட குணமாகி விடுமாம்.
  • இந்த மூலிகை கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதிலுள்ள ப்ளோனாய்டுகள் கெட்ட கொழுப்புகளை குறைத்து இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கிறது.
  • உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கலோரிகளை எரிக்கிறது. மெட்டா பாலிச அளவை சமநிலையில் வைக்கிறது.
  • மெட்டபாலிச அளவை அதிகரித்து தேவையற்ற கலோரிகளை எரிப்பதால் உடல் எடை வெகுவாக குறைந்து விடுந்து விடும்.
  • இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களின் பெருக்கத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. உடம்பில் உள்ள நச்சுக்களையும்வெளியேற்றி விடும்.
  • இந்த மூலிகையை எடுத்துக் கொண்டு வந்தால் இரவில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் நிம்மதியான உறக்கத்தை பெற முடியும்.
  • மனநிலை பாதிப்புகளான மன அழுத்தம், டென்ஷன், அனிஸ்சிட்டி போன்றவற்றை சரி செய்து மனநிலையை சீராக வைக்கிறது.
  • ஹவ்தோர்னில் உள்ள விட்டமின் ஏ கண்பார்வையை அதிகரிக்கிறது. கண்புரையை தடுக்கிறது.
முக்கிய குறிப்பு

கருவுற்ற பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

குழந்தைகளுக்கு இந்த மூலிகையை கொடுக்க வேண்டாம்.