ஜார்ஜியாவிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் மன நலம் பாதிக்கப்பட்ட 55 வயது நபர் ஒருவரை காப்பக ஊழியரான பெண் ஒருவர் 30 முறை பெல்ட்டால் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொலிசார் கைப்பற்றியுள்ள அந்த CCTV கெமரா காட்சிகளில் Joey Cason என்னும் அந்த நபரை தொடர்ந்து முகத்தில் குத்துவதும் தெரிய வந்துள்ளது.
ஒரு ஊழியர் Joey Casonஐ 30 முறை பெல்ட்டால் அடிக்க, பயத்தில் ஒரு மூலையில் பதுங்கிக் கொள்கிறார் அவர்.
அதே வீடியோவில் Joey Casonஐ கீழே போட்டு ஊழியர்கள் குத்துவதோடு, அந்த இல்லத்தில் தங்கியிருக்கும் மற்றவர்களையும் அவரை அடிக்க விடுவதும் பதிவாகியுள்ளது.
அவர்கள் உணவுப்பொருட்களை Casonமீது வீசியெறிவதோடு அவரை கிண்டல் செய்து சிரிக்கின்றனர்.
Cason உடல் ரீதியாக சரியாக செயல்பட்டாலும், அவருக்கு தீவிர மன நல பாதிப்பு உள்ளதாக தெரிகிறது.
Casonஐ அடித்த Shakia Smith என்னும் பெண் உட்பட சம்பவம் தொடர்பாக ஐந்து காப்பக ஊழியர்கள் மீது தாக்கியது மற்றும் முதியவர் ஒருவரை சரியாக கவனிக்கத் தவறியது உட்பட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருப்போர் தாக்கப்படுவதை அறிந்திருந்தும் கண்டும் காணாமல் விட்ட மற்றும் ஐந்து ஊழியர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏழு பேர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மேலும் பலருக்கு கண், முகம் என பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, சிலருக்கு கைகள் உடைந்துள்ளதையும் விசாரணை அதிகாரிகள் கண்டனர்.
விசாரணையை அடுத்து காப்பகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Cason மற்றொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.