பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ” இந்த தொகுதியில் மக்கள் கொடுக்கும் வரவேற்பை பார்த்தால் அதிமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என தெரிகிறது.
பாஜக கூட்டணி வெற்றிபெறப்போவதை எண்ணி ஸ்டாலின், கே.எஸ் அழகிரி மற்றும் கமல் ஆகியோர் பதற்றத்தில் உள்ளனர். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட இந்த கூட்டணியைத்தான் அமைத்திருப்பார்.
ஜெயலலிதாவை சட்டசபையில் அவமதித்த திமுக அவரது மரணம் குறித்து விசாரணை நடத்துவோம் என கூற என்ன தகுதி இருக்கிறது. உலக நாயகன் கமல் தற்போது உளறல் நாயகனாக மாறி வருகிறார். அரசியலில் அவர் கத்துக்குட்டி பிரிவினை பேசி பிரபலாமாக நினைக்கிறார்.
கமலின் டார்ச்லைட் ஒருநாள் பேச்சிலேயே பீஸ் ஆகிவிட்டது. காந்தியின் பேரன் என கூற தகுதியில்லாதவர் அவர். கமலின் ஒழுக்கத்தை அனைவரும் அறிவர். மக்கள் நீதி மையத்திற்கு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் ” என கூறியுள்ளார்.