இன்றைய ராசிபலன் (15/05/2019)

  • மேஷம்

    மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத் தெறிவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். கனவு நனவாகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • கன்னி

    கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். எல்லோரும் உங்களைக் குறைக் கூறுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

  • துலாம்

    துலாம்: எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். போராடி வெல்லும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.

  • தனுசு

    தனுசு:  சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

  • மகரம்

    மகரம்:  கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் விலகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

  • கும்பம்

    கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் தேவையற்ற அலைச் சலுக்கு ஆட்படுவீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்
    படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: சின்ன சின்ன சந்தர்ப் பங்களையும், வாய்ப்புகளை யும் பயன்படுத்திக் கொள்வீர் கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மதிப்புக்
    கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.