நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்னு நம்ம முன்னோர்கள் நிறைய பேரு சொல்லி வச்சிருக்காங்க.. சோக்காலியா இல்லைனாலும் சீக்காலியா இருக்கக்கூடாது. நம்ம எல்லாருக்கும் இருக்கற ஆசையும் அதுதான்.
யாருக்குதான் நூறு வருசம் வாழணும்னு ஆசையில்ல. பாழா போன புற்று நோயும், கல்லீரல் மற்றும் இதய பிரச்சனைகளுமே மனிதனை படுக்கையில் சாய்த்துவிடுகிறது.
போதாகுறைக்கு சர்க்கரை நோயும் பாடாய்படுத்துகிறது. ஆனா இதெல்லாம் இல்லாம நோயற்ற வாழ்வு வாழணும்னா அதுக்கு ஒரு அற்புதமான பொருள் இருக்கு… அதுதான் சீமை டீ…!
சீமை டீயா..?
சீமை காட்டுமுள்ளங்கியின் இலை அல்லது வேரை கொண்டு இந்த டீ தயாரிக்கப்படுகிறது. நீங்கள் இதுவரை குடித்து வரும் டீ அல்லது காபியில் இருக்கும் நன்மைகளை விட பல மடங்கு இதில் ஆற்றல் நிறைந்துள்ளது.
இந்த டீயில் எண்ணற்ற பலன்கள் உள்ளது என ஆராய்ச்சிகளும் சொல்கிறது.
இந்த சீமை டீயை ஆய்வு செய்ததில் ஒரு அற்புத தகவல் கிடைத்துள்ளதாம். அதாவது, இந்த டீயில் உள்ள சில ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் போட்டோ கெமிக்கல்ஸ் உடலுக்கு அதிக சுறுசுறுப்பை தந்து எப்போதும் மிடுக்காகவே சீமராஜாவை போல வைத்து கொள்ளும்.
சர்க்கரை நோயாளி
சர்க்கரை நோயாளிகளுக்கு அன்றாடம் சர்க்கரை நோயினால் அவதிப்படுவோருக்கு ஒரு சிறந்த மருந்தாக இந்த சீமை டீ உள்ளது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும், சோர்வடையாமல் வைத்து கொள்ளவும் இந்த டீயை நீங்கள் தினமும் குடிக்கலாம். குடிப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.
தயாரிக்க தேவையானவை…
- சீமை காட்டு முள்ளங்கி வேர்
- சீமை காட்டு முள்ளங்கி இலை
- தண்ணீர்
- தேன்
தயாரிக்கும் முறை…
- சீமை காட்டு முள்ளங்கியின் இலைகள் மற்றும் வேரை எடுத்து கொள்ளவும்.
- பிறகு நன்றாக அலசி கொண்டு, சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை கொதிக்க விட்ட பின், 1 ஸ்பூன் நறுக்கிய சீமை வேர் அல்லது இலைகளை சேர்க்க வேண்டும்.
- 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து விடவும். பிறகு கொஞ்சம் ஆறியவுடன் இதனை வடிகட்டி குடிக்கலாம்.
- தேவைக்கு அரை ஸ்பூன் தேனும் கலந்து குடிக்கலாம்.