சுவிஸ் பெண்மணி ஒருவர் அகதி இளைஞர்கள் இருவரால் வலுக்கட்டாயமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவை சேர்ந்த இரு அகதி இளைஞர்களே துஸ்பிரயோக வழக்கில் சிக்கி நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் Frauenfeld பகுதியில் வைத்து குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தன்று Frauenfeld பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் பாதிக்கப்பட்ட 44 வயதான சுவிஸ் பெண்மணியிடம் குறிப்பிட்ட எரித்திரியா அகதி இளைஞர்கள் இருவரும் பேச்சுக் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து மூவரும் இணைந்து மது அருந்தவும் போதை மருந்து பயன்படுத்தவும் செய்துள்ளனர்.
இதனையடுத்து மூவரும், குறித்த பெண்மணியின் குடியிருப்புக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கே சென்றதும் அந்த இளைஞர்கள் இருவரும் வலுக்கட்டாயமாக குறித்த பெண்மணியின் ஆடைகளை உருவி துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளனர்.
முதலில் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியில் முடியவே, அவரால் அழ மட்டுமே முடிந்துள்ளது.
மட்டுமின்றி குறித்த பெண்மணியை அவர்கள் இருவரும் மிரட்டி 6 முறை துஸ்பிரயோகம் செய்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த புகாரை மொத்தமாக மறுத்துள்ள 23 மற்றும் 19 வயது எரித்திரியா இளைஞர்கள், குறித்த பெண்மணியின் ஒப்புதலுடனையே அனைத்தும் நடந்தது என்றும்,
போதை மருந்துக்கு பதிலாக பாலியல் உறவுக்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதலில் அந்த 19 வயது இளைஞருடனையே அந்த பெண்மணி நெருக்கமாக இருந்ததாகவும், பின்னரே அந்த 23 வயது இளைஞர் அவர்களுடன் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி குறித்த பெண்மணி தங்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்ததாகவும் இளைஞர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அந்த 23 வயது எரித்திரிய இளைஞர் மீது மேலும் சில பாலியல் அத்துமீறல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் நடைபெறும் என கூறப்படுகிறது.