அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அமைச்சர் வஜிர அபேவர்தன சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

வெசாக் விடுமுறை சனிக்கிழமை வருவதனால் திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.