காரைக்குடியில் மது குடித்துவிட்டு கோழிக்கறி கேட்டபோது கைகலப்பு ஏற்பட்டதால் உடன் பிறந்ந்த அண்ணனையே தம்பி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குடியில் வசிப்பவர் மீனாள். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று இரவு சாப்பிடும் போது இவரது மூத்த மகன் பிரதாப் கோழிக்கறி வேண்டும் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
அருகில் இருந்த தம்பி பிரதீஸ் எப்போதும் அம்மாவுடன் ஏன் சண்டையிடுகிறார் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதாப் தம்பியை அடித்துள்ளார். இவர்கள் இருவரையும் அம்மா சண்டை போடாமல் இருக்கும்படி தடுத்துள்ளார்.
அதன் பின்னர் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த பிரதாப் மீது, தம்பி பெட்ரொல் ஊற்றி தீ வைத்தார். இதில் தீப்பற்றி எரிந்த பிரதாப்பை அருகில் உள்ளவர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி பிரதீஸை தேடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.