நாம் எல்லோரும் ரயிலில் அதிகமாக பயணிப்போம். ஆனால் ரயிலில் லக்கேஜ் கொண்டு செல்ல சில கட்டுப்பாடுகளும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா..? அப்படி தெரியவில்லை என்றால் இதனைப் படியுங்கள்.
ரயில் பயணத்தின்போது நீங்கள் பயணிக்கும் பெட்டிகளை பொருத்து, லக்கேஜ் கொண்டு செல்லப்படும் பொருட்களின் எடையும் மாறுபடுகிறது. ஏசி முதல் வகுப்பில் பயணிக்கிறீர்கள் என்றால், நீங்கள் இலவசமாக 70 கிலோ வரை எடுத்துச் செல்லலாம். இதற்கான சுமையின் அளவு 15 கிலோ வரை வரையறை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர அதிகபட்ச அளவாக 150 கிலோ வரை எடுத்துச் செல்லாம் (இதில் இலவசமாக அனுமதிக்கப்படும் 70 கிலோவும் அடங்கும்).
2-ஆம் தர ஏசி பயணம் என்றால் இலவசமாக 50 கிலோ வரை கொண்டு செல்லலாம். வரையறைப்பட்ட சுமையின் அளவு 10 கிலோ மட்டுமே. அதிகப்பட்ச அளவாக 100 கிலோ கொண்டுசெல்லலாம் (இலவசமாக அனுமதிக்கப்படும் 50 கிலோ உள்பட)
3-ஆம் தர ஏசி பயணம் என்றால் 40 கிலோ வரை இலவசமாக அனுமதிக்கப்படும். வரையறை செய்யப்பட்ட எடையின் அளவு 10 கிலோ மட்டுமே. அதிகப்பட்ச அளவே 40 கிலோ.
ஸ்லீப்பர் வகுப்பு என்றால் 40 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லாம். வரையறை அளவு 10 கிலோ. அதிகபட்ச அளவு 80 கிலோ (இலவச 40 கிலோ உள்பட).
இரண்டாம் வகுப்பு- இலவசமாக 35 கிலோ எடுத்துச் செல்லலாம். வரையறை அளவு 10 கிலோ. அதிகபட்ச அளவு 70 கிலோ (இலவச 35 கிலோ உள்பட).
5 முதல் 12 வயதிற்குப்பட்ட குழந்தைகள் அவர்கள் பயணிக்கும் ரயில் பெட்டியை பொறுத்து, இலவசமாக அனுமதிக்கப்படும் எடையில் பாதி அளவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஒருவேளை பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அளவை தெரியாமல் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், கூடுதல் சுமைக்கூலிக்கான கட்டணம் 6 மடங்குக்கு அதிகமாக வசூலிக்கப்படும்.