பில்லா-2 படத்தை இயக்கிய சக்ரிடோல்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர்காலம். பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படம் மே 31-ந்தேதி வெளியாகயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில் இந்த கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான காமோஷியில் தமன்னா நடித்திருக்கிறார். பிரபுதேவாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சக்ரிடோல்டி இயக்கியுள்ள இந்த படமும் மே 31-ந்தேதி திரைக்கு வருவதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒரே கதையில் உருவாகியுள்ள நயன்தாரா- தமன்னா நடித்த கொலையுதிர்காலம், காமோஷி என்ற இரண்டு படங்களும் ஒரேநாளில் திரைக்கு வருகின்றன.