இந்தியாவில் இருந்து கடந்த 2016ஆம் ஆண்டு வெளியேறிய ஜாகீர் நாயக், மலேசியாவில் தற்போது வசித்து வருகிறார். மலேசியா அரசால், ஜாகீர் நாயக்குக்கு நிரந்தர பிரஜை அந்தஸ்தும் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், தம்மை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் இந்தியா திரும்ப தயக்கமில்லை என்றார்.
மோடி அரசை விட காங்கிரஸ் அரசு குறைந்த தீமையை செய்யக்கூடியது என்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் அறிவித்துள்ளார்.
இதனிடையே, ஜாகிர் நாயக்கை மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் புகழ்ந்ததை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் தூண்டப்பட்டு டாக்காவில் தாக்குதல் நடத்தியதாக தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்ததை சுட்டிக் காட்டிய அவர், காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகளுக்கு நண்பனாக விளங்குவதாக சாடினார்.