அதிமுக தோற்க வேண்டும் என்பதுதான் டிடிவி தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக வேண்டும் என்பது ஸ்டாலின் ஆசை என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எங்களது கூட்டணி ஆசை என்னவென்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்குவது போன்ற வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது.
ஸ்டாலின் ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்துவிட்டு கொச்சையான வார்த்தைகள் மூலம் தனிநபர் விமர்சனங்களை அவர் செய்து வருகிறார் என்னை, டாக்டர் ராமதாசை, முதலமைச்சர் துணை முதலமைச்சர் பிரதமர் ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார்.
ஆனால் நாங்கள் நாகரீக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம். ராகுல் பிரதமராவதும் ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது.
இதனை தெரிந்து கொண்டு மூன்றாவது அணிக்கு போகும் நோக்கில் சந்திரசேகரராவிடம் ஒரு மணி நேரம் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதில் இருந்து எதிரணி மிகுந்த குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.
ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார் நீட் தேர்வு, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை, கச்சத்தீவை தாரை வார்த்தது போன்றவை திமுக ஆட்சிக் காலத்திலேயே அனுமதிக்கப்பட்டது.
அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார். காவேரியில் மிகப்பெரிய பச்சை துரோகம் செய்தது. திமுக ஜனாதிபதியாக ஸ்டாலினுக்கு தகுதி உள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.