சோனியா காந்தியிடம் இருந்து ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்.!

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வரக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் அனைவருக்கும் சோனியா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கடிதத்தில், வருகிற 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாள் அன்று டெல்லியில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்கால அரசியல் பற்றி அதில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், 23-ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

23-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் ஒன்றுதிரட்ட சோனியா அழைப்பு விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.