திருமண விழாவிற்கு ஹெலிகொப்டரில் வந்த மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…

பிரேசிலில் மணப் பெண் வந்த ஹெலிகொப்டர் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதால், அங்கிருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் கத்திய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரேசிலின் மொரம்பி மாகாணத்தில் இருக்கும் Vinhedo-வில் திருமண விழா நடைபெற்றது. இதனால் உறவினர்கள் பலரும் அங்கு வந்திருந்தனர்.

அப்போது மணப் பெண் வித்தியாசமான முறையில் ஹெலிகொப்டடரில் அழைத்து வரப்பட ஏற்பட செய்யப்பட்டிருந்தது.

அதன்படி ஹெலிகொப்டர் குறித்த பகுதியில் தரையிறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று கிழே விழுந்து விபத்தில் சிக்கியதால், இதைக் கண்ட அங்கிருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக உள்ளே இருந்த மணப்பெண், பைலட், குழந்தை மற்றும் புகைப்பட கலைஞர் ஆகியோரை காப்பாற்றியுள்ளனர்.

இருப்பினும் இதில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. மூன்று பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மணப் பெண் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டதாகவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அந்த ஹெலிகொப்டர் தரையிரங்கி விபத்தில் சிக்கிய வீடியோ தற்போது வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது.