இலங்கை குண்டுவெடிப்பு தற்கொலைப்படை தாக்குதல்தாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பான செய்தியை நியூஸ் 18 பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதியான அலாவுதீன் அகமது முத் (22) என்பவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பான தகவலை அலாவுதீனின் தந்தை அகமது லிபி நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயரத்னே முன்னிலையில் வெளியிட்டார்.
அவர் கூறுகையில், எனக்கு உள்ள ஐந்து பிள்ளைகளில் அலாவுதீன் நான்காவது பிள்ளையாவார்.
14 மாதங்களுக்கு முன்னர் அலாவுதீனுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி அவர் மனைவிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.
நான் கடைசியாக அலாவுதீனை ஏப்ரல் 14ஆம் திகதி தான் பார்த்தேன், அவன் சகோதரிக்கு பிறந்த குழந்தையை காண அவன் வந்தான் என கூறியுள்ளார்.
இதனிடையில் தனது சகோதரியின் கணவருக்கு தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் அலாவுதீன் ஒரு கடிதம் எழுதியுள்ளான்.
அதில், என்னை இனி எதிர்பார்க்காதீர்கள், நான் வரமாட்டேன், தயவு செய்து என் பெற்றோரை கவனித்து கொள்வதோடு எனக்கு பிரார்த்தனை செய்யுங்கள் என எழுதப்பட்டிருந்தது.
அலாவுதீன் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பின்னரே அந்த கடிதம் குடும்பத்தாரிடம் கிடைத்துள்ளது.