90ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்களை வெளியேற்றியதை இப்போது அல்ல, அப்போதே சரியாகத்தான் பார்த்தோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இஸ்லாமியர்களை வடக்கில் இருந்து வெளியேற்றுவதற்கான உண்மைக்காரணம் கிழக்கில் ஏற்பட்ட சில அதிர்வலைகள் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து கொண்டிருந்தபோது சில நாசகார நடவடிக்கைகளுக்காக சில முஸ்லிம்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
அதை உணர்ந்து கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த காலத்தில் முஸ்லிம்கள் அவ்வாறான ஒரு தாக்குதலை நடத்தியிருந்தால் அது பாரிய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியிருக்கும்.
ஆகவே முஸ்லிம்களின் நலனை கருத்திற்கொண்டே தேசியத் தலைவர் பிரபாகரன் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.