கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தாயும் மகளும் பலி!

இரத்தினபுரி – எகொடமல்வல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எகொடமல்வல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய லாலனி புஷ்பலதா மற்றும் அவரது தாயான 75 வயதுடைய ​கே.நந்தவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த மகளோடு தகாத உறவினைப் பேணி வந்த நபரொருவரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.