தமிழகத்தில் விருதுநகர் அருகே தாத்தாவே சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
இவருக்கு, பெற்றோர் இல்லாத காரணத்தினால், தனது அத்தையின் வீட்டில் தங்கி படித்து வந்தார். பள்ளி விடுமுறை தினத்தில் தனது தாத்தா கருப்பையா வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், சமீப தினமாக வித்யா உடல் சோர்வாகவும், வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த அவரது அத்தை சிறுமியைச் சோதித்துப் பார்த்தபோது சிறுமி வயிறு பெரிதாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அத்தை சிறுமியிடம் நடந்தவற்றை விசாரிக்க, டிவி பார்க்கச் செல்லும் போது தாத்தா கருப்பையா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததைக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து கட்டனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் உடனடியாக வந்து முதியவர் கருப்பையாவைக் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிறுமியை சோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.