கொலை வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற இளம்பெண்: கர்ப்பிணியாக திரும்பிய பரிதாபம்!

அமெரிக்காவில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்ற இளம்பெண் ஒருவர், கர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாப சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

17 மாதங்களுக்குமுன் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் Latoni Daniel (26).

சிறையில் இருந்த Latoni கர்ப்பமாக இருந்தது பின்னர் தெரியவந்தது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் Latoni பிரசவத்திற்காக தற்காலிகமாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் எப்படி கர்ப்பமானார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. அவரது வழக்கறிஞர், சிறையிலிருக்கும்போது Latoniக்கு வலிப்பு நோய்க்கு மருந்து கொடுக்கப்பட்டதாகவும், மயக்க மருந்து சாப்பிட்டிருக்கும்போது அவரை யாரேனும் வன்புணர்வு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்.

ஆனால் சிறைக்கு செல்லும் முன் தனது தங்கைக்கு வலிப்பு நோயே கிடையாது என்று Latoniயின் அண்ணன் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் பலரும் அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்து விடலாம் என்றும், தத்துக் கொடுத்து விடலாம் என்றும் கூறியும், அது கடவுள் தனக்கு கொடுத்த பரிசு என்று கூறி, தானே அந்த குழந்தையை வளர்க்க முடிவு செய்துள்ளார் Latoni.