பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ‘இந்து தீவிரவாதம்’ என்று பேசிய கமலஹாசனின் பேச்சிற்கு மிகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் கமலஹாசனை விட சிறப்பாக படித்தவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கின்றனர். சரித்திர உண்மை என்று பொய்யுரைத்து சரித்திரத்தை திரரித்துக்கொண்டிருகிறார்.
மேலும், இந்து தீவிரவாதம் ரணத்தை ஆற்றுகிற ரணமாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். ரணமாக இல்லை. அது ஆறி கொண்டிருப்பதை குத்திக் கிளறி மீண்டும் ரத்தம் வர வைத்து பிரிவினைவாதத்தை கமலஹாசன் தற்போது தூண்டி கொண்டு இருக்கின்றார்.
தான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதையே மிகப் பெரிய சாதனை என்று கூறிக் கொண்டு இருக்கிறார். ஆட்சியாளர்களை சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவோம் என்று அவர் கூறுகிறார். தமிழக மக்கள் கமல்ஹாசனை சட்டை கலையாமல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.