இன்றைய ராசிபலன் (17/05/2019)

  • மேஷம்

    மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சாதுர்யமானப் பேச்சால் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தின் அடிப் படை வசதிகளை உயர்த்த முற்படுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாராகள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.

  • கன்னி

    கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பாதியில் நின்றுப் போன வேலைகள் முடிவடையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • தனுசு

    தனுசு: யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • மகரம்

    மகரம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான நாள்.

  • கும்பம்

    கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும்.

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வியாபாரத்தில் அலைச்சல்
    இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். போராட்டமான நாள்.