இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. எல்லா மாநிலத்து பெண்களை காட்டிலும் கேரளாவில் உள்ள பெண்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.
அழகிலும், குணத்திலும், பண்பிலும் கேரளத்து பெண்கள் சற்று மற்ற மாநிலத்து பெண்களை காட்டிலும் மாறுபட்டே இருக்கின்றனர். கேரளாவை கடவுள்களின் நிலம் என்றே அழைப்பார்கள்.
இப்படிப்பட்ட அழகிய பெண்கள் உள்ள இந்த மாநிலத்தை தேவைதைகளின் மாநிலம் என்றே அழைக்கலாம்.
கொள்ளை கொள்ளும் அழகை எப்படி கேரளத்து பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது புதிரான கேள்வியாக உங்கள் மனதில் இருந்தால், அதற்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். கேரளத்து பெண்கள் இத்தனை அழகுடன் வலம் வருவதற்கு மிக முக்கிய காரணம் இந்த 2 பொருட்கள் தானாம்.
ஆமணக்கு எண்ணெய்
சருமமும், தோலும் எப்போதுமே ஈர்ப்பதுடன் இருக்க ஆமணக்கு எண்ணெய்யை பல கேரளத்து பெண்கள் பயன்படுத்துவர்களாம். இதில் உள்ள வைட்டமின்கள் நேரடியாகவே செல்களை புத்துணர்வூட்டி சிறப்பான அழகை தருகிறதாம்.
இயற்கை சந்தனம்
பூமியில் இருந்து கிடைக்கப்படும் ஒரு வகை களிமண் தான் முல்தானி மட்டி. இதுவும் பெரும்பாலான கேரளத்து மக்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருள் தான். இதை இயற்கை சந்தனத்துடன் சேர்த்து பயன்படுத்துவார்களாம். இவை முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நச்சு பொருட்கள் போன்றவற்றை தடை செய்து விடும்.
3 கலவை
பெரும்பாலான கேரளத்து பெண்கள் இந்த முறையை பயன்படுத்தி தான் முக அழகை எளிதாக பெறுகின்றனர்.
இதற்கு தேவையானவை…
- நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
- கோதுமை மாவு 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் கோதுமை மாவை மஞ்சளுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
இதை செய்து வந்தாலே நீங்களும் கேரளத்து பைங்கிளிகள்தான்.