ஆர்யா கொடுக்கும் சூப்பர் ஸ்பெஷல்!

ஆர்யா நீண்ட நாட்களாக ஒரு சூப்பர் ஹிட் கொடுக்க போராடி வருகிறார். கடந்த வருடம் அவரின் நடிப்பில் கஜினிகாந்த் படம் வெளியானது. பின்னர் அவருக்கும் நடிகை சாயிஷாவுக்கு திருமணம் மார்ச் மாதம் நடைபெற்றது.

அதன் பின் இருவரும் இணைந்து சூர்யா ஹீரோவாக நடிக்கும் காப்பான் படத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ரிலீஸ்க்கும் தயாராகிவிட்டது.

இதன் பின் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்திலும், சாந்தகுமார் இயக்கும் மகாமுனி படத்திலும் அவர் நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக ஆர்யா போன ஏப்ரல் மாதமே கூறிவிட்டார்.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் நாளை காலை வெளிவர இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.