இந்தகால இளைஞர்களுக்கு சமுகவலைத்தளங்களே வாழ்க்கையாகிவிட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது இண்ஸ்டாகிராம் செயலியை வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் விளையாட்டாக “உண்மையாக கூறுங்கள் நான் சாகனுமா.. வாழனுமா என நீங்களே கூறுங்கள் என்று தன்னை பின்பற்றுபவர்களிடம் கேட்டுள்ளார்.
இதற்கு 69 சதவீதம் பேர் சாகவேண்டும் என கூறியுள்ளனர். இதனை மனவலியோடு ஏற்று கொண்ட சிறுமி மலேசியாவின் சரவாக் கட்டிடத்தின் மேலிருந்து குதித்து உயிரைவிட்டுள்ளார்.
நண்பர்கள் கொடுத்த எதிர்மறை கருத்தால் ஒரு உயிர் போனது. இதை புரிந்தாவது விளையாட்டுக்கு கூட இப்படி செய்ய கூடாது.
மேலும் ஒரு நாள் முடிவில் 88 சதவீதம் பேர் உயிர்வாழ வேண்டும் என போலிங்கில் வந்துள்ளது.