நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி..

நியூசிலாந்தை சேர்ந்த விக்டோரியா என்ற சிறுமி டிராகன்கள் பற்றி அற்ந்துகொள்ள வேண்டும் என ஆசை வந்துள்ளது. இதற்கு ஆய்வு செய்ய தகுந்த நிதி தேவைபட்டது. இதை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் முழித்த சிறுமிக்கு பிரதமரிடம் கேட்கலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

இதையடுத்து அந்த சிறுமி பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்னுக்கு ”நான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன், அதற்காக அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், அதற்கு பயிற்சியளிக்கவும் தேவையான சக்திகளை தருமாறு” லெட்டர் எழுதியுள்ளார். மேலும் லெட்டரில் 5 நியூசிலாந்து டாலரையும் லஞ்சமாக வழங்கியுள்ளார்.

இதற்கு உடனே பதிலளித்த பிரதமர் ஜெசிண்டா, டிராகன்கள் துறை தொடர்பாக தற்போது அரசு ஆய்வு ஏதும் செயய்வில்லைஎனவே உங்களது ஆசையை நிறைவேற்ற கொடுத்த லஞ்சத்தை உங்களிடமே திருப்பியனுப்புகிறேன். டிராகன்கள் மீது நான் ஒரு கண் வைத்துக்கொள்கிறேன். டிராகன்கள் ஆடை அணிந்து வருமா நகைச்சுவையாக கேள்வி எழுப்பி லெட்டர் அனுப்பியுள்ளார் பிரதமர்.