அமெரிக்காவில் வயதான நோயாளிகள் 12 பேரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் செவிலியருக்கு, மர்மமாக இறந்த 1000 நோயாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பில்லி செமிமீர் (46) என்கிற செவிலியர் கடந்த ஆண்டு, லு தி ஹாரிஸ் என்கிற 81 வயது நோயாளியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
ஆனால் செவ்வாயன்று அவர் கூடுதலாக 11 கொலைச்சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். டல்லாஸ் கவுண்டியில் ஆறு மற்றும் காலின் கவுண்டியில் ஐந்து பேர் என தெரியவந்தது.
இதேபோல 93 வயதான பெண் உட்பட 2 பேரின் மூச்சை நிறுத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதிலிருந்து தப்பிய ஒரு பெண் பொலிஸாரிடம் கூறுகையில், பில்லி செமிமீர் என்னுடைய அறையில் நுழைந்ததும் ஒரு தலையணையை கொண்டு முகத்தை மூடி கொலை செய்ய முயற்சி செய்தான் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டெக்சாஸ் பொலிஸார் மர்மமாக இறந்த 750க்கும் மேற்பட்டோரின் இறப்புக்களை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர்.