நெஞ்சார்ந்த நன்றி! இலங்கை குண்டுவெடிப்பில் 3 பிள்ளைகளை இழந்த கோடீஸ்வர தம்பதி வெளியிட்ட உருக்கமான அறிக்கை

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் தனது மூன்று குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெரிய கோடீஸ்வர தொழிலதிபர் ஆண்டர்ஸ் ஹோல்ச் மற்றும் அன்னி தம்பதிகளின் மூன்று பிள்ளைகளான அல்மா (15), அக்னீஸ் (12) மற்றும் அல்பிரட் (5) ஆகியோரும் அடக்கமாகும்.

இந்நிலையில் பிள்ளைகளை இழந்து தவித்து கொண்டிருக்கும் தங்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி மனதை தேற்றியவர்களுக்கு ஆண்டர்ஸ் – அன்னி தம்பதி நன்றி கூறி உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், எங்கள் மூன்று பிள்ளைகளை இழந்த பின்னர் எங்களுக்கு கிடைத்த இரங்கல்கள், அனுதாபங்கள் மற்றும் மனதை தேற்றும் வார்த்தைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

எங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது.

இலங்கை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் எங்களின் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

எங்கள் மூன்று குழந்தைகளின் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஆண்டர்ஸ் – அன்னி தம்பதிக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் என்ற நிலையில் தற்போது மகள் ஆஸ்டிரிட் உடன் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.