சக்காளத்தி சண்டையில் கழுத்தறுக்கப்பட்ட ஐந்து மாத கர்ப்பிணி.!

சென்னையில் உள்ள செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூர் ஜோதி நகர் பகுதியை சார்ந்தவர் முகம்மது ரஷீத். இவர் அங்குள்ள செங்குன்றம் பகுதியில் இறைச்சி கடையில் பணியாற்றி வருகிறார். வங்காள தேசத்தை சார்ந்த பெண்மணியின் பெயர் சுராகாத்தூண் (வயது 28). இவர்கள் இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று., ரேஸ்மி என்ற ஏழு வயதுடைய மகளும்., முகமது ஷகீன் என்ற இரண்டு வயதுடைய மகனும் உள்ளார்.

இந்த நிலையில்., முகமதின் மனைவியான சுராகாத்தூவின் உறவுக்கார பெண் ஜெரினா பேகம் (வயது 25)., திருமணம் செய்வதற்கு மாப்பிளை பார்ப்பதற்காக கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு மாப்பிள்ளை தேடிய சமயத்தில் வரன் சரிவர கிடைக்கவில்லை. இந்த நிலையில்., சுராகாத்தூனிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக எனக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு வருகிறது., நீ எனது மனைவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள் என்று தெரிவித்துள்ளார். இதனை அவரும் ஏற்கவே., இருவருக்கும் சில மாதங்கள் கழித்த பின்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் ஜெஸ்மி என்ற ஐந்து வயதுடைய குழந்தை உள்ளது.

இந்த நிலையில்., திருமணத்திற்க்கு பின்னர் தனது இரண்டாவது மனைவியுடன் அதிகளவு நெருக்கத்தில் இருந்து பாசத்தை பொலிந்து வந்ததால்., இருவருக்கும் இடையே வாய்க்கால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சமயத்தில்., நேற்று வழக்கம்போல முகம்மது வேலைக்கு செல்லவே., இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை அடுத்து., சுராகாத்தூண் வீட்டில் இருந்த கத்தியால் ஜெரினாபேகத்தை கொலை செய்துள்ளார்.

கழுத்து அறுபட்ட நிலையில்., உயிருக்கு போராடி துடித்த ஜெரினாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர்., ஜெரினாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்து., தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெரினாவின் கழுத்தை அறுத்த சுரக்காத்தூணை கைது செய்த காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்., இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சுரக்காத்தூணை சிறையில் அடைத்தனர். அவரின் வயிற்றில் இருந்த ஐந்து மாத சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.