கடல் உணவுகள் என்றாலே பிடிக்காதவர் எவரும் இல்லை என்று தான் சொல்ல முடியும்.
இதில் மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்றவை மனிதர்களால் அதிகமாக உண்ணப்படும் கடல் உணவுகளாகும்.
பொதுவாகக் கடல் உணவு மற்றைய புலால் உணவுகளை விடச் சிறந்ததாகவும், கொழுப்புச் சத்து குறைவானதாகவும் காணப்படுகின்றது.
அந்தவகையில் சிலர் கடல் உணவுகள் உண்பதனால் மாரடைப்பு ஏற்படும் என சொல்கின்றார்கள்.
உண்மையில் கடல் உணவுகள் மாரடைப்பை ஏற்படுத்துமா? என்று இங்கு பாரப்போம்.
- கடல் உணவுகளில் அதிகளவு ஒமேகா 3 அமிலமும், பல அவசியமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.
- ஒமேகா 3 அமிலம் என்பது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உங்களுக்கு பல வழிகளில் உதவக்கூடியதாகும்.
- கடல் உணவுகளில் அதிகளவு கொழுப்பு இருந்தாலும் அவை முழுமையாக ஆரோக்கியமற்ற உணவு என்று கூறிவிட இயலாது.
- இதில் இருக்கும் நல்ல கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றவை.
- இந்த உணவுகளை மிதமான அளவில் சாப்பிடுவது உங்கள் இதயத்திற்கு பாதுகாப்பைத்தான் வழங்கும்.
- கடல் உணவுகளில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் இருப்பதுடன் அமினோ அமிலங்களும், ஒமேகா 3 அமிலமும் இருக்கிறது. இது உங்கள் LDL கொழுப்பு அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது.
- இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க கொழுப்பு குறைவான அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த சூழ்நிலையில் நண்டு, சிப்பி, கிளிஞ்சல் போன்ற கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- கடல் உணவுகள் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தேவையான சரியான கொழுப்பை சரியான அளவில் கொடுக்கும்.
- மிதமான அளவில் கடல் உணவுகள் சாப்பிடுவது உங்களுக்கு இதயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது