எனது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் ஆலயத்தை வரும் 18ஆம் திகதி தாக்குவோம் – கிடைக்கபெற்ற மிரட்டல் கடிதம்

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு இன்றையதினம் வந்த அனாமதேய கடிதத்தால் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Advertisement

நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பப்பட்ட குறித்த அனாமதேய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் ஆலயத்தை வரும் 18ஆம் திகதி தாக்கவுள்ளனர் என குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதையடுத்து நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.