மீன் பிடிக்க சென்ற இடத்தில் முதலைக்கு இரையான மீனவர்!

ஜிம்பாப்வே நாட்டில் சகோதரருடன் மீன் பிடிக்க சென்ற மீனவரை முதலை கடித்து கொன்றுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் பால் நியாஹான்ஸா (27) என்பவர் தன்னுடைய சகோதரன் ஜெரிமியா (19) உடன் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென ஒரு முதலை பால் நியாஹான்ஸாவை தாக்கியுள்ளது. உடனே அங்கிருந்து தப்பி ஓடிய ஜெரிமியா, வனத்துறை அதிகாரிகளை அழைத்து வந்துள்ளார்.

ஆனால் அதற்குள் பால் நியாஹான்ஸா இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவருடைய உடலை கைப்பற்றிய அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து பேசிய பொலிஸார், பீட்ரைஸ் அணைக்கட்டு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது முதலை ஒன்று பால் நியாஹான்ஸாவின் ஆணுறுப்பை துண்டாக கடித்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளார்.