மகாத்மா காந்தி இந்தியாவின் தந்தை இல்லை… பாகிஸ்தானின் தந்தை.! பாஜக நிர்வாகி.!!

நாளை மக்களவையின் இறுதி கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்தை பதிவு செய்த பாஜக நிர்வாகி.

மத்திய பிரதேச மாநிலத்தின் பாஜக செய்தி தொடர்பாளராக இருப்பவர் அனில் சவுமித்ரா. இவர் சமூக வலைதளங்களில் மகாத்மா காந்தி இந்தியாவின் தந்தை கிடையாது. அவர் பாகிஸ்தானின் தந்தை என பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே கோட்சே குறித்து பாஜக நிர்வாகிகள் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக கட்சிக்கு இது மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனில் சவுமித்ரா பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் ராகேஷ் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஒரு வாரத்துக்குள் தன்னுடைய பதிவுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார். மக்களவை இறுதி கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக நிர்வாகி இது போன்ற கருத்தை பதிவு செய்தது, பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.