விமான நிலையத்தில் சர்ச்சையில் சிக்கிய தமிழக எம்பி!!

நேற்று இரவு 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலை அந்த விமானத்தில் வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது உடைமைகளை டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது சூட்கேசில் கட்டுக்கட்டாக நிறைய பணம் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின்னர், இதுகுறித்த தகவலை சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு கொடுத்தனர்.

அதன்படி, சென்னையில் அந்த விமானம் தரை இறங்கியதும் ஏழுமலை எம்.பி.யை தடுத்து நிறுத்தி, அவரது சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.25 லட்சம் வரை இருந்ததாக தெரிகிறது. அதன்பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் எம்பியை விசாரணை செய்தனர்.

அப்போது எம்பி அவரது மகனின் படிப்பு செலவுக்கு என கூறி உரிய ஆவணங்களை காட்டி நிரூபித்த பின்னர், அவரை பணத்துடன் செல்ல அனுமதித்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.