இந்த அணிதான் உலகக்கோப்பையை வெல்லப்போகிறது.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன்.!!

10 அணிகள் பங்கேற்கும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலக கோப்பை தொடருக்கான தங்களது அணியை அனைத்து நாடுகளும் அறிவித்துள்ளது. இந்த உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி, இந்த உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியவை, கிரிஸ் கெய்ல் இந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.

அவர் வெற்றியுடன் விடை பெற விரும்புவார். இதனால் மற்ற தொடர்களை விட இந்த தொடரில் கிரிஸ் கெய்ல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைப்பார். இதுதவிர பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக டேரன் சமி தெரிவித்துள்ளார்.