புத்தபிரானின் போதனைகளை மீட்டிப் பார்க்க வேண்டும் – ஜனாதிபதி

அதிகாரத்திற்காக அடுத்தவரை அழிப்பதற்குப் பதிலாக அளவற்ற அமைதியைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புதல் குறித்த, புத்தபிரானின் போதனைகளை இந்த தினத்தில் நாம் மீண்டும் மீட்டிப் பார்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெசாக் தினம் இன்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இனம், மதம் என்ற அடிப்படையில் பிரிந்திருந்து அழிவுக்கு வழிவகுப்பதைத் தவிர்த்து, ஒவ்வொருவரின் கலாசாரத்திற்கும் மதிப்பளித்து, மனிதர்களாக சமாதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விகரமசிங்க தனது வெசாக் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவே பௌத்த தர்மத்தின் அடிப்படைகளாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.