தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரை அத்வானி. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸ் மிகவும் பிரபலமானது. இந்த கதை அந்தரங்க விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்த கதையில் கதையின் நாயகி சுயஇன்பம் காண்பது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் இந்த படம் பற்றி பேசிய நடிகை கியாரா, நான் படத்தில் நடிப்பதர்க்கு முன்னரே இதுபோன்ற காட்சிகள் இருக்கும் என கூறியதால், நான் நடிப்பதற்கு தயாராக தான் இருந்தேன். எனது பெற்றோர்களும் நான் படத்துக்காக நடிக்க ஒப்புக்கொண்டனர். அதனால் எனக்கு அது ஒரு நடிப்பு மட்டும் தான்.
அந்த படம் வெளியான பிறகு நான் இந்த காட்சியை எனது பாட்டியிடம் காட்டினேன் அவர் அந்த காட்சியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் நடிப்பு அருமை என பாட்டி ஷாக் கொடுத்தார் என்று நடிகை கியாரா கூறியுள்ளார்.