திருத்தணி அருகேயுள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் முனிகிருஷ்ணன். இவர் லாரி ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி யுவராணி. இவர்களுக்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் லாரி ஓட்டுநரான முனிகிருஷ்ணன் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம்.மேலும் அவ்வாறு செல்பவர் சில நாட்கள் கழித்தும் வீட்டிற்கு வருவார். இந்நிலையில் முனிகிருஷ்ணனின் தந்தை டில்லிபாபு தனது மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.மேலும் இதனால் யுவராணி அவரை பலமுறை கண்டித்துள்ளார்.
ஆனாலும் டில்லிபாபு திருந்தாத நிலையில் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத யுவராணி தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். ஆனாலும் அவரது கணவர் மனைவி சொல்வதை நம்பாமல் தனது தந்தை மீது தேவைஇல்லாமல் பழி சுமத்துவதாக தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே மன உளைச்சல் அடைந்த யுவராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் வீட்டிற்கு திரும்பிய முனிகிருஷ்ணன் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் யுவராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தனது தற்கொலைக்கு என் மாமனார் டில்லிபாபு தான் காரணம் என யுவராணி எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார்கள் முனிகிருஷ்ணனின் தந்தை தில்லி பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.