தாய்லாந்து பாங்காக் பகுதியில் விவசாயி ஒருவர் தனது நாயுடன் வயல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென மோப்பம் பிடித்த தொடங்கிய நாய் வேகமாக ஓடி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனது கால்களால் மண்ணை தோண்டியுள்ளது. அப்பொழுது குழந்தையின் கால் ஒன்றுக்கு லேசாக தெரிந்துள்ளது.
இதனை கண்டா அக்கம்பத்தினர் வேகமாக விரைந்து அந்த இடத்தை தோண்டி பார்த்துள்ளனர். அப்பொழுது அங்கு பிறந்து ஒரு சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டு இருந்தது
இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த போலீசார் குழந்தையை மருத்துவமனையில் அனுமதினார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு குழந்தை நலமுடன் உள்ளது .
இதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது ஒரு திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. விடுதியில் தங்கியிருந்த 15 வயது பெண் ஒருவர் திருமணம் ஆகாமலே கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் அதனை தனது வீட்டில் மறைப்பதற்காக விடுதியிலேயே தங்கிய அவர் குழந்தை பிறந்த சில நாட்களுக்கு பிறகு அதனை தனது ஊருக்கு கொண்டுவந்து யாருக்கும் தெரியாமல் உயிருடன் இரக்கமற்று மண்ணில் புதைத்துவிட்டு வீட்டிற்கு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்தே நாய் பிங்பாங் குழந்தையை கண்டுபிடித்து காப்பாற்ற உதவியது. இதனை தொடர்ந்து குழந்தையை புதைந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் குழந்தை சிறுமியின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.