மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல், ‘இந்து தீவிரவாதி’ என்றும் ‘இந்து என்பது மாற்றான் சொல்’ என்றும் கூறி இருப்பது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம், “இந்து என்பது மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. அது கலாச்சாரம். அது ஒரு அடையாளம். கருட புராணத்திலேயே இந்துஸ்தானம் உள்ளது.
இந்து என்பது வெறும் சொல் மட்டுமல்ல. அது வாழ்வியல் நெறியாகும். இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றது சுட்டுக் கொன்றது ஒரு சீக்கியர் தான். அதற்காக சீக்கிய தீவிரவாதம் என கூறலாமா? ராஜீவ்காந்தி கொலையை சுட்டிக்காட்டி தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கூற முடியுமா?
கமல் இந்து தீவிரவாதம் என கூறி வரலாற்றுப் பிழையை செய்துள்ளார். கோட்சே காந்தியை சுட்டுக்கொன்றதற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கின்றது. கோட்சேவை சுட சொல்லி இந்து மதம் கட்டளையிடவில்லை. விஸ்வரூபம் படப் பிரச்சினை சமயத்தில் கமல் என்ன பாடு பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர் தீவிரவாதம் பற்றி பேசுவது எல்லாம் மிகவும் ஆபத்தானது. கமல் இடதுசாரி சிந்தனையை கொண்டவர்களோடு பழகுவது தான் இதற்கு காரணம். யார் மகாத்மா என்று தான் எழுதிய புத்தகத்தை கமல் படிக்க வேண்டும். கமல் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? கமல் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருக்கிறேன்: என எச்சரித்துள்ளார்.