மீண்டும், மீண்டும் சீண்டும் அமேசான்!!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு வணிக இணைய நிறுவனம் அமேசான் ஆகும். இந்த இணைய விற்பனை ஸ்டெப்பில் நிறுவனத்தின் விற்பனையை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். முதன் முதலில் இது ஒரு இணைய புத்தக சந்தையாக ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய சில பொருட்களை விற்க ஆரம்பித்து, இன்று அனைத்து விதமான எலக்ட்ரானிக், துணிகள், உணவுப்பொருட்கள், பொம்மைகள் என முன்னேறிவிட்டது. இதில், அனைத்து தரப்பு பொருட்களையும் மக்கள் வாங்குகின்றனர். மேலும், இது நம்பகத்தன்மை வாய்ந்த ஆன்லைன் விற்பனை இடமாக விளங்குகிறது.

இதனால் நாளுக்கு நாள் அமேசானின் வாடிக்கையாளர்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால், அமேசான் அடிக்கடி இந்தியாவை அவமதிக்குமாறு சில காரியங்களை செய்து வருகிறது. அதில் இந்திய தேசிய கொடியை அவமதிக்கும் விதத்தில், அவற்றை செருப்புகளில் பயன்படுத்தியும், இந்து கடவுள்களின் உருவபொம்மைகளை டாய்லெட் மேட்டாகவும், கால்மிதிகளிலும் ஒட்டி விற்பனைக்கான புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தது.

இதனையடுத்து, காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அந்நிறுவனத்திற்கு 2017இல் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து, இனி இந்தியர்கள் மற்றும் இந்துக்கள் யாரும் அமேசானை பயன்படுத்த கூடாது என டுவிட்டரில் #boycottamazon என்று ஹாஷ்டேக் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.